நடிகர் சித்தார்த்தின் புதிய பட பர்ஸ்ட் லுக் வெளியீடு

'டக்கர்' படத்திற்கு பிறகு சித்தார்த் மற்றும் கார்த்திக் ஜி கிரிஷ் இணையும் இரண்டாவது படம் இதுவாகும்.;

Update:2026-01-27 08:44 IST

சென்னை,

20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் சித்தார். இவரது நடிப்பில் இறுதியாக 3 பிஎக்கே என்ற படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சித்தார்த் தற்போது, கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்து வருகிறது.

'டக்கர்' படத்திற்கு பிறகு சித்தார்த் மற்றும் கார்த்திக் ஜி கிரிஷ் இணையும் இரண்டாவது படம் இதுவாகும். இந்த படத்தில் ராஷி கன்னா கதாநாயகியாக நடிக்கிறார். யோகி பாபு, சுனில் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 'ரவுடி அண்ட் கோ' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்