அஜித்துடன் செல்பி எடுத்த நடிகை ஸ்ரீலீலா

மலேசியாவில் நடிகர் அஜித் உடன் நடிகை ஸ்ரீலீலா செல்பி எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.;

Update:2025-12-13 17:50 IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.

அஜித் ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இது அஜித்குமாரின் 64-வது படமாகும்.

அஜித் மலேசியாவில் நடக்கும் கார் ரேஸிங்கில் பங்குபெற்று வருகிறார். மலேசியா செல்லும் பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி வருகிறார்கள். சமீபத்தில் மலேசியா சென்ற நடிகர் சிம்பு அஜித்தை நேரில் சந்தித்துள்ளார்.

இந்நிலையில், மலேசியாவில் நடிகர் அஜித் குமாரை சந்தித்த நடிகை ஸ்ரீ லீலா செல்பி எடுத்துக்கொண்டார். இவர்களுடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் சென்றுள்ளதால் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள். இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் புதுப் படத்தில் நடிக்கவுள்ளதாக முன்பு தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்