அனுஷ்கா நடித்துள்ள 'காதி' படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது

அனுஷ்கா, விக்ரம் பிரபு நடித்துள்ள ‘காதி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது.;

Update:2025-08-21 07:16 IST

சென்னை,

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் அனுஷ்கா ஷெட்டி. இவரின் சினிமா வாழ்க்கையில் 'பாகுபலி' முக்கிய படமாக அமைந்தது. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’.

அதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகியாக ‘காதி’ படத்தின் மூலம் மீண்டும் பார்வையாளர்களின் இதயங்களை கவர வந்துள்ளார். இந்த படம் பாக்ஸ் ஆபீஸை கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார். இதில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் போதைப்பொருள் கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ளது. அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் செகண்ட் சிங்கிளான 'தஸ்ஸோரா தஸ்ஸோரா' என்ற லிரிக் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை கீதா மாதுரி, ஸ்ருதி ரஞ்சனி, சாகேத் கோமந்தூரி இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை மதன் கார்கி எழுதியுள்ளார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்