வெளியானது அதர்வாவின் ‘தணல்’ பட டிரெய்லர்...திரைக்கு வருவது எப்போது?
இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக தமிழில் பிரம்மன், மாயவன் போன்ற படங்களில் நடித்த லாவண்யா திரிபாதி நடித்துள்ளார்.;
சென்னை,
அதர்வா நடித்துள்ள 'தணல்' திரைப்படத்தின் 'டிரெய்லரை' படக்குழு வெளியிட்டுள்ளது.
''பாணா காத்தாடி'', ''பரதேசி'', ''சண்டிவீரன்'' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் அதர்வா . இவர் தற்போது 'இதயம் முரளி' படத்தை தன் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில், அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் 'தணல்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதில் அஸ்வின், லாவண்யா திரிபாதி , பிரதீப் விஜயன், சர்வா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்சன் திரில்லரில் தயாராகி உள்ள இத்திரைப்பட படப்பிடிப்பு பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்த நிலையில் திரைப்படம் வெளியாகாமல் இருக்கிறது.
இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ''டிரெய்லர்'' தற்போது வெளியாகி இருக்கிறது. அதனுடன், இத்திரைப்படம் வரும் 12-ம் தேதி வெளியாக உள்ளதையும் படக்குழு தெரிவித்துள்ளது.