'அஃகேனம்' படத்தின் டிரெய்லர் வெளியானது

அருண்பாண்டியன் தயாரித்துள்ள 'அஃகேனம்' படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-06-14 20:23 IST

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'தும்பா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதனைத்தொடர்ந்து, தனது அப்பா அருண் பாண்டியனுடன் இணைந்து 'அன்பிற்கினியாள்' என்ற படத்தில் நடித்தார்.

இவர் தற்போது 'அஃகேனம்' என்ற படத்தில் நடித்துள்ளார். உதய் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைக்கிறார். பிரவீன் ராஜா, ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி.எம்.சுந்தர், ஆதித்யா மேனன், சீதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

ஏ&பி குரூப்ஸ் நிறுவனம் சார்பில் அருண்பாண்டியன் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்