"காலத்தால் அழியாதவை"...ரஜினியை சந்தித்த சிம்ரன் நெகிழ்ச்சி
ரஜினிகாந்தை சந்தித்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து நடிகை சிம்ரன் நெகிழ்ச்சியடைந்திருக்கிறார்.;
சென்னை,
தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான சிம்ரன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து சிம்ரன் நெகிழ்ச்சியடைந்திருக்கிறார்.
அதனுடன், சில சந்திப்புகள் காலத்தால் அழியாதவை என்று தெரிவித்திருக்கிறார். சிம்ரன் கடைசியாக டூரிஸ்ட் பேமிலி படத்தில் நடித்திருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
மறுபுறம் ரஜினிகாந்த் கடைசியாக கூலி படத்தில் நடித்திருந்தார். கடந்த 14-ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் பாக்ஸ் ஆபீஸில் வெற்றியடைந்திருக்கிறது. விரைவில் ரூ. 500 கோடி கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.