ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு

இதில், கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கிறார்.;

Update:2025-11-10 10:21 IST

சென்னை,

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தன் முதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். எஸ்.தமன் இசையை மேற்கொள்கிறார்.

பணத்தை மையமாக வைத்து ஆக்சன் பின்னணியில் இந்தப் படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ’டைட்டில்’ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில், இந்த படத்திற்கு "சிக்மா" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்