'சென்னை பைல்ஸ் முதல் பக்கம்' படத்தின் டிரெய்லர் அப்பேட்
வெற்றி நடித்துள்ள ‘சென்னை பைல்ஸ் முதல் பக்கம்’ படம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகிறது.;
சென்னை,
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் வெற்றி. இவரது நடிப்பில் சமீபத்தில் 'ராஜபுத்திரன்' படம் வெளியானது. இதில் நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து நடிகர் வெற்றி தற்போது 'சென்னை பைல்ஸ் முதல்பக்கம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை சின்னதம்பி புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் அனீஷ் அஷ்ரப் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். மேலும், தம்பி ராமய்யா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக உள்ளதாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளது.