'தக் லைப்' படப்பிடிப்பு தள புகைப்படத்தை பகிர்ந்த திரிஷா

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'தக் லைப்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.;

Update:2025-06-09 08:21 IST

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் கூட்டணியில் 38 வருடங்களுக்கு பிறகு உருவான படம் 'தக் லைப்'. இதில் சிம்பு, அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் கடந்த 5-ந் தேதி வெளியானது. கர்நாடகாவில் மட்டும் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இப்படம் வெளியாகவில்லை. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தக் லைப் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

இந்த நிலையில், நடிகை திரிஷா 'தக் லைப்' படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசனுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

Tags:    

மேலும் செய்திகள்