''ஸ்பிரிட்'' படத்தில் இணையும் பிரபல இயக்குனரின் மகன்?

இந்தப் படத்தில் பிரபாஸ் கதாநாயகனாகவும், திரிப்தி டிம்ரி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.;

Update:2025-08-11 15:20 IST

சென்னை,

''அனிமல்'' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா ''ஸ்பிரிட்'' படத்தை இயக்குகிறார். அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் பிரபாஸ் கதாநாயகனாகவும், திரிப்தி டிம்ரி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், பிரபல இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸின் மகன் ரிஷி மனோஜ், ''ஸ்பிரிட்'' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற உள்ளதாக வதந்தி ஒன்று ஆன்லைனில் பரவி வருகிறது.

ரிஷி ஏற்கனவே ''நிசாச்சருடு'' என்ற குறும்படத்தில் நடித்து இயக்கியுள்ளார். மேலும் ''ஸ்டேக்னேஷன்'' என்ற குறும்படத்தில் இணை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

பத்ரகாளி பிக்சர்ஸ், டி-சீரிஸுடன் இணைந்து ''ஸ்பிரிட்'' படத்தை மிகப்பெரிய அளவில் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்