3 நிமிட நடிப்புக்கு ரூ. 3 கோடி சம்பளம் வாங்கிய நடிகை?

’டாகு மகாராஜ்’ படத்தில் பாலகிருஷ்ணாவுடன் இவர் நடனமாடியிருந்த 'தபிடி திபிடி' பாடல் மிகவும் வைரலானது.;

Update:2025-02-22 06:49 IST

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. இவர், 'சிங் சாப் தி கிரேட்' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தமிழில் 'லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஊர்வசி ரவுத்தேலா. தெலுங்கு, இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார்.

சமீபத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'டாகு மகாராஜ்' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் பாலகிருஷ்ணாவுடன் இவர் நடனமாடியிருந்த 'தபிடி திபிடி' பாடல் மிகவும் வைரலானது.

இந்நிலையில், இந்த 3 நிமிட பாடலுக்கு நடனமாட இவர் ரூ.3 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்