உத்தரகாண்டில் கோவில் - சரியாக கேட்டுவிட்டு பேசுங்கள்...விமர்சனங்களுக்கு 'லெஜண்ட்' பட நடிகை பதிலடி

நடிகை ஊர்வசி ரவுத்தேலா, உத்தரகாண்டில் தன் பெயரில் கோவில் இருப்பதாக சமீபத்தில் கூறியிருந்தார்.;

Update:2025-04-21 13:07 IST

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. கடந்த 2013-ம் ஆண்டு அனில் சர்மா இயக்கத்தில் வெளியான 'சிங் சாப் தி கிரேட்' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், தமிழில் 'லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

சமீபத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'டாகு மகாராஜ்' படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, உத்தரகாண்டில் தன் பெயரில் கோவில் இருப்பதாக கூறியிருந்தார். இதனால் சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை ஊர்வசி ரவுத்தேலாயின் குழு அறிக்கை வெளியிட்டு விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதில் "உத்தரகாண்டில் தன் பெயரில் ஒரு கோவில் இருக்கிறது என்றுதான் ஊர்வசி ரவுத்தேலா கூறினார். அதை ஊர்வசி ரவுத்தேலாவின் கோவில் என்று அவர் கூறவில்லை. இப்போது மக்கள் யாரும் பிறர் கூறும் விஷயங்களை சரியாக கேட்பதில்லை.

'ஊர்வசி' அல்லது 'கோவில்' என்று கேட்டவுடன், மக்கள் அதை ஊர்வசி ரவுத்தேலாவின் கோவில் என்றும் அவரை வழிபடுகிறார்கள் என்றும் நினைத்துக்கொள்கிறார்கள். விமர்சிக்கும் முன் சரியாக கேட்டுவிட்டுப் பேசுங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்