கார்த்தி நடித்த "வா வாத்தியார்" படத்தின் முதல் பாடல் வெளியானது

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.;

Update:2025-02-14 18:15 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'மெய்யழகன்'. இப்படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கி இருந்தார். அதனைத்தொடர்ந்து, பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்தில் கார்த்தி நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல், நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்ப்படத்தின் முதல் பாடலான 'உயிர் பத்திக்காம' பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்