பிரேம்ஜியின் 'வல்லமை' பட டிரெய்லரை வெளியிடும் வெங்கட் பிரபு
இத்திரைப்படம் வருகிற 25ம் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிப்பவர் நடிகர் பிரேம்ஜி. சமீபத்தில் இவர் விஜய் நடிப்பில் வெளியான 'தி கோட்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக பிரேம்ஜி கதாநாயகனாக வல்லமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
கருப்பையா முருகன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் திவ்ய தர்ஷினி, தீபா சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வருகிற 25ம் தேதி வெளியாக உள்ளநிலையில், டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, டிரெய்லரை நாளை காலை 10.10 மணிக்கு இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிடுகிறார்.