இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த விஜய்யின் செல்பி வீடியோ
விஜய் தற்போது தனது கடைசி படமான ஜன நாயகனில் நடித்து முடித்திருக்கிறார்.;
சென்னை,
தமிழ் நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜய் சமீபத்தில் மதுரையில் தனது கட்சியின் 2-வது மாநில மாநாட்டை நடத்தினார். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
கடந்த 21-ம் தேதி நடந்த இந்த மாநாட்டின்போது விஜய், கலந்துகொண்டவர்களுடன் செல்பி வீடியோ எடுத்தார். அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்தார். அது ஒரு நாளுக்குள் 10 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றது.
இதன் மூலம் தென்னிந்திய நடிகர்களிலேயே இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்டிற்கு அதிக லைக்குகளை பெற்ற நடிகர் என்ற சாதனையை படைத்தார் விஜய்.
விஜய் தற்போது தனது கடைசி படமான ஜன நாயகனில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தோடு நடிப்பிலிருந்து விடைபெறும் விஜய், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தமிழக அரசியலில் நுழைய உள்ளார்.