'சண்டக்கோழி' படத்தை விஜய் மறுக்க காரணம் - லிங்குசாமி தகவல்

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் சண்டக்கோழி;

Update:2025-02-23 06:37 IST

சென்னை,

கடந்த 2005ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் சண்டக்கோழி. மிகப்பெரிய வெற்றிபெற்ற இப்படம் விஷாலை ஆக்சன் ஹீரோவாக அறிமுகப்படுத்தியது. மீரா ஜாஸ்மின் ஹீரோயினாக நடிக்க ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், இந்த படத்தில் முதலில் விஜய் நடிக்க இருந்ததாகவும், ஆனால் பின்னர் மறுத்துவிட்டதாகவும் இயக்குனர் லிங்குசாமி கூறி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,

'சண்டக்கோழி கதையை முதலில் விஜய்யிடம்தான் சொன்னேன். பாதி கதை கேட்ட அவர் மீதி கதையை கேட்க மறுத்தார். காரணம் மீதி கதையில் ராஜ்கிரன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தது. அதன் பிறகுதான் விஷாலை நடிக்க வைத்தேன்' என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்