விஜய் சேதுபதி- பூரி ஜெகநாத் படத்தின் டைட்டில் அறிவிப்பு
பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோடு’என பெயரிடப்பட்டுள்ளது.;
விஜய் சேதுபதி பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத்துடன் இணைந்துள்ளார். பான் இந்திய திரைப்படமாக உருவாகவுள்ள இப்படம் பெரிய செலவில் எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை பூரி ஜெகநாத் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்
நடிகை சார்மி கவுர் தயாரிக்கும் இப்படத்தில், விஜய் சேதுபதியுடன் இணைந்து தபு, சம்யுக்தா மேனன், துனியா விஜய், நிவேதா தாமஸ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோடு’ என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.