“வா வாத்தியார்” படத்தின் “வானிலே சாமுராய்” பாடல் வெளியானது
கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படம் 2 நாட்களில் ரூ.4 கோடி வசூல் செய்துள்ளது.;
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி ‘வா வாத்தியார்’ படத்தில் நடித்துள்ளார். இது கார்த்தியின் 26வது படமாகும். இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்
‘வா வாத்தியார்’ ரிலீஸை முன்னிட்டு கார்த்தி, சத்யராஜ், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் மறைந்த தமிழக முதல்வரும் நடிகருமான எம்ஜிஆர் நினைவிடம் சென்று அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து தங்களின் மரியாதையைச் செலுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், ‘வா வாத்தியார்’ படத்தின் 3வது பாடலான ‘வானிலே சாமுராய்’ பாடல் வெளியாகியுள்ளது. கெளுத்தி எழுதிய இப்பாடலை முத்தமிழ் பாடியுள்ளார். இப்படம் கடந்த 14ம் தேதி வெளியானது. இப்படம் 2 நாட்களில் ரூ.4 கோடி வசூல் செய்துள்ளது.