‘ரூம் பாய்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

ஜெகன் ராயன் இயக்கியுள்ள ரூம் பாய் படம் குற்றப்புலனாய்வு திரில்லர் கதையில் உருவாகியுள்ளது.;

Update:2025-08-23 15:14 IST

சென்னை,

திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் இயக்கியிருக்கும் படம், ‘ரூம் பாய்’. இந்த படத்தின் மூலம் நிகில் என்பவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். அரண்மனை 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹர்ஷா இதில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும், இதில் இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா விஜயன், கற்பகம் என பலர் நடித்துள்ளனர். ஏசிஎம் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு வேலன் சகாதேவன் இசையமைத்துள்ளார்.

குடும்ப சென்டிமென்ட்டுடன் கூடிய குற்றப்புலனாய்வு திரில்லர் கதையில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்