ரீ-ரிலீஸாகும் விஜய்யின் 'காவலன்' திரைப்படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

காவலன் திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.;

Update:2025-12-02 11:56 IST

சென்னை,

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். அண்மையில் புதிய திரைப்படங்களை தாண்டி ரீ-ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன்படி "பாபா, ஆளவந்தான், வாரணம் ஆயிரம், அஞ்சான், அட்டகாசம், பிரண்ட்ஸ்" உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

அந்த வகையில், விஜய், அசின் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான "காவலன்" திரைப்படம் வருகிற 5ந் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பாடி கார்டின்' ரீமேக் படமாக 'காவலன்' வெளியானது. இப்படத்தை இயக்குநர் சித்திக் இயக்கி இருந்தார். இப்படத்தில் ராஜ்கிரண், மித்ரா குரியன், வடிவேலு மற்றும் ரோஜா ஆகியோர் நடித்து இருந்தனர். 'காவலன்' படம் மீண்டும் வெளியாக உள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்