விஷாலின் 35வது பட டைட்டில் வெளியீடு

ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திற்கு ‘மகுடம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.;

Update:2025-08-24 14:13 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவரது நடிப்பில் சமீபத்தில் மதகஜராஜா படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் தனது 35வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை 'ஈட்டி' பட இயக்குநர் ரவி அரசு இயக்குகிறார். இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். மேலும் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஆர்பி சவுத்ரி சார்பில் சூப்பர் குட்பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஷாலின் 35வது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘மகுடம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்