நாங்கள் 4-வது முறையாக இணைந்து பணியாற்றுகிறோம் - லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி பதிவு
இசையமைப்பாளர் அனிருத்துடன் எடுத்த புகைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.;
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முன்பதிவுகளில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்துடன் எடுத்த புகைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். அப்புகைப்படத்தின் பின்னணியில் கூலி படத்தின் ரஜினிகாந்தின் கண்கள் திரையில் உள்ளது.