"மிஸ்கின்போலவே கண்ணாடி அணிவதற்கு காரணம் என்ன?" - விஜய் சேதுபதி பதில்

விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியான 'ஏஸ்' படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.;

Update:2025-05-25 07:32 IST

சென்னை,

இயக்குனர் மிஸ்கின் மாதிரி கண்ணாடி அணிவதற்கு என்ன காரணம் ? என்பதை விஜய் சேதுபதி விளக்கினார். விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியான 'ஏஸ்' படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களின் சந்திப்பின்போது, மிஸ்கின்போலவே கண்ணாடி அணிவதற்கு காரணம் என்ன ? என்ற கேள்விக்கு பதிலளித்தார். அவர் கூறுகையில்,

'ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். கண் வறண்டு போக கூடாது என்பதற்காக கண்ணாடி அணிந்திருக்கிறேன் . வேறு எந்த காரணமும் இல்லை' என்றார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் நடிப்பில் நேற்று முந்தினம் திரையரங்குகளில் வெளியான படம் 'ஏஸ்'. இந்த படத்தினை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். இதில் நடிகை ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் திவ்யாபிள்ளை, பிருத்விராஜ் சுகுமாரன், யோகி பாபு, பி.எஸ்.அவினாஸ், ராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்