'மதராஸி'யை யாரெல்லாம் பார்க்கலாம்...- சென்சார் வழங்கிய சான்றிதழ் என்ன?

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி ரிலீஸ் ஆகிறது;

Update:2025-08-26 08:00 IST

சென்னை,

சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசை அமைக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சமீபத்தில் டிரெய்லர் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், 'மதராஸி' திரைப்படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கி இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்