‘ஜனநாயகன்’ போலவே ‘பராசக்தி’க்கும் தணிக்கை சிக்கலா?

ஜனநாயகன் படத்தை போலவே, பராசக்தி படத்துக்கும் இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.;

Update:2026-01-08 10:57 IST

சென்னை,

2026 புத்தாண்டில் வரும் முதல் பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படமும், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பராசக்தி' படமும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலில் நுழைந்துள்ள நடிகர் விஜய்க்கு 'ஜனநாயகன்' கடைசி படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேசமயம் பராசக்தி' படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோ என்றாலும், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் நடித்திருப்பதால் இப்படத்திற்கும் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. 'ஜனநாயகன்', 'பராசக்தி' இரண்டில் யார் முந்துவது? என்ற போட்டி ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்த நிலையில், 1965-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான கதை உருவாகியுள்ள பராசக்தி படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.

படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதனால் இப்படமும் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாது என கூறப்படுகிறது.

ஜனநாயகன் படத்தை போலவே, பராசக்தி படத்துக்கும் இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. பராசக்தி படம் மறு ஆய்வு கமிட்டிக்கு அனுப்பப்பட்டு உறுப்பினர்கள் படம் பார்த்த பிறகு யூ/ஏ சான்றிதழ் வழங்குவதாக சொல்லப்பட்டது. ஆனால், இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்