பாலிவுட் சினிமாவில் கால் பதிக்கும் ''லோகா'' பட நடிகை

பாலிவுட் இயக்குனர் ஜெய் மேத்தா இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2026-01-08 08:04 IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ''ஹலோ'' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, 2019ம் ஆண்டு தமிழில் ''ஹீரோ'' மூலம் அறிமுகமானார். அதில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இவரது நடிப்பில் சமீபத்தில் ‘லோகா சாப்டர்-1 : சந்திரா’ என்ற மலையாள படம் வெளியானது. இதில் கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரத்தம் குடிக்கும் மோகினியாக அவரது கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது. அந்த படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் குவித்தது. தென்னிந்திய சினிமா வரலாற்றில் நடிகையை மையமாக கொண்ட எந்த படமும் ரூ.100 கோடியை கடந்தது கிடையாது என்ற வரலாற்றையும் மாற்றி அமைத்தது.

இந்த நிலையில், தமிழ், மலையாளம், தெலுங்கில் நடித்து வரும் கல்யாணி பிரியதர்ஷனுக்கு, பாலிவுட் சினிமாவிலும் கதவு திறக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஜெய் மேத்தா இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கும் புதிய இந்தி படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்