''விஜய் இல்லாமல் எல்சியு முழுமை பெறாது'' - லோகேஷ் கனகராஜ்

''கூலி'' பட புரமோஷனில் லோகேஷ் பேசியது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.;

Update:2025-07-29 10:02 IST

கோவை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ''கூலி'' படம் ஆகஸ்ட் 14 முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படம் வெளியாக இன்னும் 2 வாரங்களே உள்ளநிலையில், புரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. அந்தவகையில், லோகேஷ் கனகராஜ் கோவைக்கு புரமோஷனுக்காக சென்றிருந்தார். அங்கு அவர் பேசியது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அவர் கூறுகையில், '' விஜய் சார் இல்லாமல் எல்சியு இல்லை. ஆனால் அவர் இனி உள்ளே வருவாரா இல்லையா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். அவருடைய எண்ணம், முயற்சிகள் என்ன என்று நமக்கு தெரியும். ஆகவே என் படம் குறித்து நான் பதில் சொல்ல இது சரியான தருணம் இல்லை. அதேநேரம் அவர் இல்லாமல் எல்சியு ஒருநாளும் முழுமை பெறாது" என்றார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எல்சியு(லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படங்களின் பிரபஞ்சம்)ன் ஒரு பகுதியாக விஜய் நடித்திருந்த ''லியோ'', கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பை பெற்றது. ''லியோ''வுக்கு முன்பு, லோகேஷ் மற்றும் விஜய் இணைந்து ''மாஸ்டர்'' படத்தில் பணியாற்றினர். இதுவும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்