''அது என் சினிமா கெரியரின் மைல்கல்'' - ''வணங்கான்'' பட நடிகை
ரோஷ்னி பிரகாஷ், தமிழில் அருண் விஜய் நடிப்பில் வெளியான ''வணங்கான்'' படத்தில் நடித்திருந்தார்.;
சென்னை,
கிச்சா சுதீப் மீண்டும் ''மேக்ஸ்'' பட இயக்குனர் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படம் கிச்சா சுதீப்பின் 47- வது திரைப்படமாகும். இதற்கு தற்காலிகமாக 'கே47' என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஏற்கனவே நடிகை நிஷ்விகா நாயுடு இணைந்துள்ளநிலையில், தற்போது ரோஷ்னி பிரகாஷ் இணைந்துள்ளார். இவர் தமிழில் சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான ''வணங்கான்'' படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், சுதீப்புடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் அவர் உற்சாகமடைந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
“இது போன்ற ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது போன்ற படங்களை என் சினிமா கெரியரில் மைல்கற்களாக உணர்கின்றேன் . சுதீப் போன்ற ஒரு பான்-இந்தியா நட்சத்திரத்துடன் பணிபுரிவது உற்சாகமாக உள்ளது'' என்றார்.