'ஒருவர் மட்டும்'.. இதுவரை செய்யப்படாத சாதனையாக "ஒன்மேன்" படம்

‘ஒன்மேன்' படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.;

Update:2025-11-28 01:07 IST

சென்னை,

‘வெங்காயம்', ‘பையாஸ்கோப்' ஆகிய படங்களை இயக்கி கவனம் பெற்ற இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் தற்போது `ஒன் மேன்' என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார்.

மேலும் படத்தின் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை, வசனம், மேக்கப், காஸ்ட்யூம், அனிமேஷன், கலர் கரெக்‌ஷன், லைட்டிங், எடிட்டிங் என அனைத்து பணிகளையும் ஏற்றுள்ளார். இதுதவிர படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களிலும் இவரே நடித்தும் இருக்கிறார்.

இது உலக சினிமாவில் இதுவரை செய்யப்படாத சாதனையாக பார்க்கப்படுகிறது. ‘ஒன்மேன்' படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. படம் குறித்து சங்ககிரி ராஜ்குமார் கூறும்போது, ‘‘தான் நினைக்கும் கருத்துக்களை உலகத்திற்கு கொண்டு செல்ல தனி ஒரு மனிதனால் முடியும் என்ற வகையில் `ஒன் மேன்' திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறேன்’’ என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்