ஓடிடியில் வெளியாகும் "அங்கம்மாள்" படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?

கீதா கைலாசம் நடித்துள்ள "அங்கம்மாள்" படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.;

Update:2026-01-06 13:49 IST

சென்னை,

ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் ப்ரோ மூவி ஸ்டேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த திரைப்படம் ‘அங்கம்மாள்’. புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். அவருடன் சரண், பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான இந்த படம், பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும், சமீபத்தில் நடைபெற்ற நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் இந்த படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘அங்கம்மாள்’ திரைப்படம் வருகிற 9ஆம் தேதி ‘சன் நெக்ஸ்ட்’ ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்