ஓடிடிக்கு வரும் ஜிவி பிரகாஷின் திரில்லர் படம்...எதில் பார்க்கலாம்?
இதில் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார்.;
சென்னை,
ஜிவி பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த திரில்லர் படமான பிளாக்மெயில் இப்போது ஓடிடியில் வெளியா உள்ளது. செப்டம்பர் 12 அன்று திரையரங்குகளில் வெளியான பிளாக்மெயில், கலவையான விகமர்சனங்களை பெற்றது.
இப்படம் சன்என்எக்ஸ்டி தளத்தில் வருகிற் 30 முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கியுள்ளார்.
இதில் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். மேலும், பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.