100 மில்லியன் பார்வைகளை கடந்த ஹாரர் திரில்லர்....இப்போது பல மொழிகளில்...எதில் பார்க்கலாம்?

இதில் சாண்டி மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.;

Update:2025-10-25 08:16 IST

சென்னை,

திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற ஹாரர் படமான கிஷ்கிந்தாபுரி, இப்போது ஜீ5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. கௌஷிக் பெகல்லபதி இயக்கியுள்ள இப்படத்தில் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் ஒரு வாரத்திற்குள் ஓடிடி தளத்தில் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது. இப்போது இந்த படம் தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் ஸ்ட்ரீமிங் ஆகிறது. இதன் மூலம் வரும் நாட்களில் இந்தப் படம் அதிக பார்வையாளர்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷைன் ஸ்க்ரீன்ஸின் சாஹு கரபதி தயாரித்துள்ள கிஷ்கிந்தாபுரியில் சாண்டி மாஸ்டர், பிரேமா, தனிகெல்லா பரணி, ஹைப்பர் ஆதி, சுதர்ஷன், ஸ்ரீகாந்த் ஐயங்கார் மற்றும் மகரந்த் தேஷ்பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்