ரூ.30 கோடி பட்ஜெட்; ரூ.3 கோடி வசூல்...பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வி: ஓடிடியில் டிரெண்டிங் - எந்த படம், எதில் பார்க்கலாம்?

சமீப காலங்களில், எந்த பரபரப்பும் இல்லாமல் வெளியான சிறிய படங்கள் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளன.;

Update:2025-10-15 10:35 IST

சென்னை,

எந்த படங்கள் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெறும் என்பதை பார்வையாளர்கள் மட்டுமே தீர்மானிக்கிறார்கள். சமீப காலங்களில், எந்த பரபரப்பும் இல்லாமல் வெளியான சிறிய படங்கள் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளன. அதே சமயம் பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியை சந்தி்த்துள்ளன.

இப்போது நாம் பேசப்போகும் படமும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி தோல்வியடைந்ததுதான். அதில் திரிஷா மற்றும் டொவினோ தாமஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஆம், அது ஐடென்டிட்டிதான்

இப்படம் அதன் பட்ஜெட்டில் பாதியைக் கூட வசூலிக்கவில்லை. சுமார் ரூ.30 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் கேரளாவில் ரூ.3.5 கோடி மட்டுமே வசூலித்தது. மேலும் உலகளவில் ரூ.16.51 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் படம் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது, இந்தப் படம் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஜீ5யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்