சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவான ‘ஹார்ட்டிலே பேட்டரி’ சீரிஸ் .. ஓடிடியில் வெளியானது!
சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்கிய இந்த வெப் சீரிஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.;
சென்னை,
ரெமாண்டிக் சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘ஹார்ட்டிலே பேட்டரி’. இதனை சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார். இதில் குரு லக்சுமன், பதின் குமார், சுமித்ரா தேவி, அனித் யாஷ் பால், யோகா லட்சுமி, இனியாள், ஜீவா ரவி, ஷர்மிளா, பிரவீணா பிரின்சி, கலை, அஜித், பவித்ரா மற்றும் சீனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது ஆறு எபிசோடுகளை கொண்டுள்ளது.
இந்த சீரிஸில் கதாநாயகி பாடினி லவ் மீட்டர் என்ற கருவியை உருவாக்குகிறார். அந்தக் கருவியின் மூலம் ஒருவர், நம்மீது எவ்வளவு அன்பை வைத்துள்ளனர் என்பதைக் கண்டறிய முடியும். அந்தக் கருவியே பாடினிக்கு எதிராக எவ்வாறு திரும்புகிறது என்பதை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸ் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.