ஓடிடிக்கு வரும் பாக்யஸ்ரீ போர்ஸின் அடுத்த படம் - எங்கு, எப்போது பார்க்கலாம்?
திரையரங்குகளில் ஓடி முடிந்த இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.;
சென்னை,
பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் கடந்த மாதம் 2 படங்கள் திரைக்கு வந்தன. அவை ’காந்தா’ மற்றும்’ ஆந்திரா கிங் தாலுகா’. துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருந்த ’காந்தா’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இப்படம் ஓடிடியில் வெளியானது.
ஆனால், நிதின் கதாநாயகனாக நடித்த ஆந்திரா கிங் தாலுகா அந்தளவுக்கு வரவேற்பை பெறவில்லை. மகேஷ் பாபு பி இயக்கிய இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது.
இந்நிலையில், திரையரங்குகளில் ஓடி முடிந்த இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி, வருகிற 25-ம் தேதி முதல் நெட்பிளிக்ஸில் இப்படம் ஸ்டிரீமிங் ஆகும் என்று எதிர்பார்கப்படுகிறது.