கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு

சிறப்பு வழிபாடுகளில் அந்தந்த பகுதி பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update:2025-06-25 12:56 IST

அமாவாசையை முன்னிட்டு நீடாமங்கலம் அருகேயுள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் கோவிலில் எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் கோவில் திருக்குளத்தில் நீராடி பிதுர் தர்ப்பணங்களையும் செய்தனர்.

இதேபோல் நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில், நீடாமங்கலம் சந்தானராமர் கோவில், திருவோணமங்கலம் ஞானபுரி 33 அடி உயர ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அமாவாசை வழிபாடுகள் நடைபெற்றன. இந்த சிறப்பு வழிபாடுகளில் அந்தந்த பகுதி பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

திருமருகல்

நாகை மாவட்டம் திருமருகலில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி நேற்று அமாவாசையையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வரதராஜ பெருமாளுக்கு மஞ்சள் பொடி, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வரதராஜ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்