பிரம்மோற்சவ விழா 4-வது நாள்: கல்ப விருட்ச வாகனத்தில் திருப்பதி கோவிந்தராஜசாமி உலா

நேற்று காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது.;

Update:2025-06-06 08:36 IST

திருமலை,

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 7 மணியளவில் கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

வாகன வீதிஉலா முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன. பல்ேவறு கலைஞர்கள் நாட்டிய, நடன நிகழ்ச்சிகளை நடத்தினர். மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. பக்தி பாடல்களை, பஜனைகள் நடத்தப்பட்டன. மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

வாகன வீதி உலா முடிந்ததும் காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமிக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் பல்வேறு பழச்சாறுகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5.30 மணியில் இருந்து 6 மணி வரை ஊஞ்சல் சேவை நடந்தது.

சர்வ பூபால வாகன வீதிஉலா

அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை சர்வ பூபால வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை பல்லக்கு வாகனத்தில் 'ேமாகினி' அலங்காரத்தில் கோவிந்தராஜசாமி வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து 10 மணி வரை கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்