திருப்பதி: இலவச தரிசனத்திற்கு 19 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 50 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.;

Update:2025-04-27 08:14 IST

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி ஆழ்வார் டேங்க் காட்டேஜ் விடுதி வரை நீண்ட தூரத்துக்குக் காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கு 19 மணி நேரம் ஆனது. நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரை 50 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று முன்தினம் 64 ஆயிரத்து 536 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 30 ஆயிரத்து 612 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 37 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்