ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் கைசிக புராணம் வாசிப்பு
கள்ளபிரான் சுவாமி முன்னிலையில் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி கைசிக புராணம் வாசித்தார்.;
நவதிருப்பதி கோவில்களில் முதல்தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் கைசிக புராணம் வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, சுவாமி கள்ளபிரான் ஸ்ரீதேவி பூதேவி வைகுண்ட நாயகி சோரநாதநாயகி அம்பாள்களுடன் சயனக்குறட்டிற்கு எழுந்தருளினார்.
அங்கு கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி கள்ளபிரான் சுவாமி முன்னிலையில் கைசிக புராணம் வாசித்தார். இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் சீனிவாசன், தேவராஜன், திருவேங்கடத்தான், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் நிஷாந்தினி, அறங்காவலர் குழுத் தலைவர் அருணா தேவி கொம்பையா உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.