திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோவிலில் நவராத்திரி தெப்பத் திருவிழா

அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி , அம்பாள் விசேஷ அலங்காரத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.;

Update:2025-10-02 19:44 IST

தஞ்சாவூர் மாவட்டம் , பாபநாசம் அருகே உள்ள திருக்கருகாவூர் ஸ்ரீ முல்லைவனநாதர் உடனுறை ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் திருக்கோவிலில் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. நவராத்திரியின் முதல்நாள் இரவு ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது.

தினந்தோறும் இரவு கொலுவில் வீற்றிருக்கும் அம்பாளுக்கு லட்சார்ச்சனையும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.விழாவின் 5ம் நாள் ஏக தின லட்சார்ச்சனை நடைபெற்றது. நேற்று (1ந்தேதி) காலை சரஸ்வதி பூஜையன்று அம்பாளுக்கு விஷேச அபிஷேக, ஆராதனையும், மாலை சுவாமி ஸ்ரீ சந்திரசேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு ஷீரகுண்டம் எனும் திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி , அம்பாள் விசேஷ அலங்காரத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்