திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 7 நாட்கள் தெப்ப உற்சவம்

அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி திருக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.;

Update:2026-01-21 14:22 IST

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடந்தோறும் தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தெப்ப உற்சவம் வரும் 26-ம் தேதி தொடங்கி 1-ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த 7 நாட்களிலும் கோவில் திருக்குளத்தில் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி திருக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். அதன்பின்னர் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

தெப்ப உற்சவத்தின் முதல் நாளில் கோதண்டராம சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். 27-ம் தேதி ருக்மணி சத்யபாமா சமேத பார்த்தசாரதியும், 28-ம் தேதி ஸ்ரீதேவி, பூதேவியுடன் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியும், 20-ம் தேதி ஆண்டாளுடன் கிருஷ்ணரும் தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.

கடைசி மூன்று நாட்களில் அதாவது, ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 1-ம் தேதியில் கோவிந்தராஜ சுவாமி, தாயார்களுடன் தெப்பத்தில் எழுந்தருள்கிறார். தெப்பத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்ய உள்ளனர்.

தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கோவிந்தராஜ சுவாமி கோவில் மற்றும் தெப்பக்குளம் பகுதிகள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்