கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவிலில் பங்குனி தேரோட்டம்

கீழ்வேளூர் பங்குனி தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.;

Update:2025-04-09 17:42 IST

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் பிரசித்தி பெற்ற அட்சயலிங்கசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 1-ந்தேதி காப்பு கட்டுதல், பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினமும் அஞ்சுவட்டத்தம்மன் சிம்ம வாகனம், அன்னபட்சி, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று தேரோட்டம் நடைபெற்றது. அஞ்சுவட்டத்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து வழிபட்டனர்.

விழாவில் கோவில் செயல் அலுவலர் பூமிநாதன், கிராம முக்கியஸ்தர்கள், கோவில் பணியாளர்கள், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்