தொண்டி: புனித ஆசீர்வாதப்பர் ஆலய திருவிழா தேர்பவனி

அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆசீர்வாதப்பர் சொரூபம் வைக்கப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக எடுத்துவரப்பட்டது.;

Update:2025-07-13 11:11 IST

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள சம்பை பங்கு, புதுப்பட்டிணம் சின்னமடம் தோப்பு கிராமத்தில் உள்ள புனித ஆசீர்வாதப்பர் ஆலய 21-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் நவநாள் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து திருவிழா சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.

சிறப்பு திருப்பலி நிறைவுற்ற பின் தேர்பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆசீர்வாதப்பர் சொரூபம் வைக்கப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக எடுத்துவரப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பெருவிழா திருப்பலியுடன் கொடி இறக்கம் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்