தை அமாவாசை: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு
பரத்வாஜேஸ்வரர் கோவில் வளாகத்தில் உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.;
ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம்
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தை அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவில் அருகில் உள்ள பரத்வாஜ் புஷ்கரணிக்கு மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்குள்ள பரத்வாஜேஸ்வரர் கோவில் வளாகத்தில் உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் வேதப் பண்டிதர்கள் சிறப்பு கலசங்கள் ஏற்பாடு செய்து பூஜைகள் நடத்தினர். அப்போது தீப, தூப நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கொட்டே.சாய் பிரசாத், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோலா.வைசாலி, குர்ரப்பசெட்டி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.