திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்
விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி, தீர்த்த குளத்தில் 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. ஆன்மிக சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முக்கிய நிகழ்வாக 3-ம் தேதி திருக்கால்யாண உற்சவமும், 8-ம் தேதி திருத்தேரோட்டமும் நடந்தது. நேற்று இரவு தெப்போற்சவம் நடந்தது. அதையொட்டி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினார். பின்னர் தீபாராதனையுடன் தெப்பம் புறப்பட்டது. கோவில் தீர்த்த குளத்தில் 5 முறை தெப்பம் வலம் வந்தது. தெப்பக்குளத்தின் கரையில் திரண்டிருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.