தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.;
தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றாக திகழும் தென்காசி உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மற்றும் ஐப்பசி திருவிழா தேரோட்டம் நடைபெறும்.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது.
திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று சிறப்பு நிகழ்ச்சியாக உலகம்மன் திருத்தேரில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வரும் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தென்காசி எம்எல்ஏ பழனி நாடார், கோவில் அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் 15ஆம் தேதி இரவு நடைபெற உள்ளது.