திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா- 1008 திருவிளக்கு பூஜை

திசையன்விளையில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.;

Update:2025-08-20 11:25 IST

தென் மாவட்டங்களில் புகழ் பெற்ற திசையன்விளை வடக்குத் தெரு சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா கடந்த 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விழாவின் மூன்றாவது நாளான நேற்று காலை சிறப்பு பூஜையைத் தொடர்ந்து டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மதியம் சிறப்பு பூஜையும், மாலையில் சமய சொற்பொழிவும் நடந்தது.

நேற்று இரவு சுடலை ஆண்டவர் மகளிர் சேவா சங்கம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. இந்நிகழ்ச்சியில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விளக்கு ஏற்றி சுவாமியை வழிபட்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் தொழில் அதிபர் தர்மலிங்கம் நாடார் குடும்பத்தார் சார்பில் திசையன்விளை வியாபாரிகள் சங்க பேரமைப்பு தலைவர் சாந்தகுமார் சாந்தி, சரோஜா, பாஸ்கர் செல்வி ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர். 

Tags:    

மேலும் செய்திகள்