வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி

தேர் பவனியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.;

Update:2025-09-09 11:42 IST

தென்னகத்து வேளாங்கன்னி என்று போற்றப்படும் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் திருவிழா கடந்த மாதம் 29ந் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய விழாவான ஆரோக்கிய அன்னையின் பிறப்புப் பெருவிழா, இறைவார்த்தை சபை 151வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவஊற்று இயேசுவின் அருமருந்து 25வது ஆண்டு பிறப்பு விழா ஆகியவை நேற்று நடைபெற்றன.

மாலை 5மணிக்கு நற்கருணை ஆராதனையும், 6 மணிக்கு முப்பெரும் விழா கூட்டுத்திருப்பலியும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு வண்ணவிளக்குகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர் பவனி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு நன்றி திருப்பலியுடன் விழா நிறைவுபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்