ஜெனகை மாரியம்மன் கோவிலில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு
வைகாசி விசாகத் திருவிழாவின் 11-ம் நாளில் ஜெனகை மாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன.;
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. 11-ஆம் நாள் திருவிழாவில் தெற்கு ரத வீதி மேலரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பாக சிதம்பர விநாயகர் திருக்கோவிலுக்கு சப்பரத்தில் அம்மன் புறப்பாடு நடைபெற்றது. அங்கு அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன.
உறவின்முறை சங்கத்திலிருந்து ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் ஜெனகை மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி வைத்து பெண்கள் கும்மி பாட்டு பாடினர். தொடர்ந்து ஜெனகை மாரியம்மன் ஊர்வலம் நடைபெற்றது.