கடந்த நவம்பரில் டீசல் பயன்பாடு 6 மாதங்களில் இல்லாத அளவு அதிகரிப்பு

சரக்குகளை கையாளுவதில் டீசலில் இயங்கும் வாகனங்கள் பெரும் பங்காற்றுகிறது.;

Update:2025-12-05 06:56 IST

சென்னை,

பொருளாதாரத்தின் முக்கியத்துவமான ஆதாரமாக சரக்கு போக்குவரத்து உள்ளது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கச்சா பொருட்களை ஏற்றி, இறக்கவும், வடிவமைக்கப்பட்ட பொருட்களை மக்கள் பயன்பாட்டுக்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் சரக்கு போக்குவரத்து பயன்படுத்தப்படுகிறது.

இதில் டீசலில் இயங்கும் வாகனங்கள் சரக்குகளை கையாளுவதில் பெரும் பங்காற்றுகிறது. அதிக எடையை இழுப்பதற்கும், அதிக செயல்திறனை வழங்குவதில் டீசல் என்ஜின் வாகனங்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்னும் நிலை உள்ளது. டீசல் வாகனங்கள் பொதுவாக பெட்ரோல் வாகனங்களை காட்டிலும் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கி பொருளாதார ரீதியாக லாபகரமானதாக மாற்ற உதவுகிறது.

இந்த நிலையில் கடந்த நவம்பரில் நாட்டில் சரக்கு வாகனங்கள், விவசாயம் மற்றும் ரெயில் என்ஜின்களுக்கு பயன்படுத்தப்பட்ட டீசல் அளவு உயர்ந்துள்ளதாக ஸ்ரீராம் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த நவம்பரில் நாட்டில் மொத்தம் 85.5 லட்சம் டன் அளவில் டீசல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அதற்கு முந்தைய அக்டோபர் மாதத்தை காட்டிலும் 12 சதவீதம் அதிகமாகும். அக்டோபரில் நாட்டில் 67.9 லட்சம் டன் அளவில் டீசல் பயன்பாடு இருந்துள்ளது. மேலும் கடந்த மே மாதத்தை தொடர்ந்து நவம்பரில் டீசல் பயன்பாடு அதிகரித்துள்ளது. மே மாதத்தில் நாட்டின் டீசல் பயன்பாடு 85.7 லட்சம் டன்னாக இருந்தது. பெட்ரோல் பயன்பாடு நவம்பர் மாதத்தில் 4 சதவீதம் வரை குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் நாட்டின் மொத்த பெட்ரோல் பயன்பாடு 35 லட்சம் டன்னாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்